இறைவனிடம் நாம் வேண்டும் செயல் முழுமையாக நிறைவேற நாம் முழுமனதுடன் ஆத்ம ரீதியாக அமைதியுடன், இறைவனை பாடி புகழ்ந்து
ஆத்மார்த்த நிலையில் தியானிக்கும் போது இறைவன் நம் கஷ்டங்கள் தீர வழிவகுக்கிறார்.
ஆகவே நாம் தினசரி உணவு உண்ணும் போது எத்தகைய சந்தோஷமும், ஆத்ம நிலையும், மன அமைதியுடன், நல்ல சுவையாக, ஒரே நோக்கத்தோடு, உணவை உண்ண நினைக்கிறோமோ, அதேபோல் இறைவனை ஒரே நோக்கத்தோடு, நல்ல இனிமையான பாடல்கள் பாடி, மனதை அமைதிப்படுத்தி ஆத்மநிலையோடு தியானித்தோமேயானால் இறைவன் கண்டிப்பாக நமக்கு எல்லா நன்மைகளையும் செய்வார் என்று நம்புகிறேன்,
ஆகவே நாம் தினந்தோறும் ஒவ்வொரு வேளையிலும் உணவை நமது உடலின் பாதுகாப்புக்கும், உடலின் வளர்ச்சிக்கும் உட்கொள்வது போல், நமது ஆத்மாவின் வளர்ச்சிக்கும், அதன் துய்மைக்கும் நமது ஆத்மாவை இறைவடி சேர்ப்பதே நமது ஆத்மாவிற்கு தரும் உணவு ஆகும், ஆகவே தினமும் ஒவ்வொரு வேளையும் இறைவனை நாம் மனதால் நினைத்தால் மட்டுமே போதும் அது இறைவனை நமக்கும் நமது ஆத்மாவிற்கும் நல்லது செய்ய வைத்துவிடும் என்பது என் கருத்து.
No comments:
Post a Comment