Thursday, March 24, 2011

THEDUTHAL

நான் இறைவனை தேடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் தன்மையை இங்கு விளக்கி கூறுகிறேன். அதில் ஏதேனும் குறைகள் இருந்தால் தங்கள் அதை நிவர்த்தி செய்ய எனக்கு சுட்டிகாட்டவும்.
இறைவனை அடைய மந்திரம், தந்திரம் , யந்திரம் என மூன்று முறைகளை பின்பற்றலாம்.
மந்திர உச்சாடனம் மூலம் இறைவனது நாமங்களை சொல்லி இறைவனை அழைக்கலாம்.
தந்திரம் மூலம் இறைவனை நமக்குள் எலசெய்து என்றும் நாம் அவருக்கு அடிமையை இருந்ததும அவரது புகழை எல்லோருக்கும் தெரியசெய்தும் தர்ம காரியங்கள் செய்தும் இறைவனை அடைவது.
யந்திரம் என்பது இறைவனுக்குரிய மூல மந்திரங்களை அவருக்கு உரிய உலோகத்தில் வரைந்து அவருக்கு உரிய மந்திரங்களை முறையாக உச்சாடனம் செய்து பூஜை செய்து வருவதால் இறைவனிடம் வரங்கள் பெறுவது.

மேலும் இறைவனை அடைய சித்தர்களும், முனிவர்களும், ரிஷிகளும் நிர்ணயித வேதங்களை படித்து அதன்படி நடந்து இறைவனை அடைவது என பல வழிகளை நம் முன்னோர்கள் வகுத்து தந்துள்ளார்கள்.
அதன்படி இறைவனை தரிசனம் பண்ணும்போது எந்த முறையில் தரிசனம் பண்ண வேண்டும் என்பது பற்றியும் அவரிடம் நாம் எந்த முறையில் வரங்களை பெற முடியும் என்பது பற்றியும் எனக்கு தெரிந்தவைகைளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ANMEGAM

ஸ்ரீ கணேஷாய நமஹ:
அனைவரும ஆனந்த வாழ்க்கை வாழ அய்யன் விநாயகன் அருள் பெற்று எனது முதல் முயற்சியை துவங்குகிறேன்

உலகம் என்பது எல்லோருக்கும் உடையது என்றாலும் அதை இறைவன் எதற்காக படைத்தான் என்று வினவும் போது முதலில் எனக்குள் ஒலித்த ஒளி அந்த இறைவன் எங்கு இருக்கிறான் என்பதை தேடும் முயற்சி நமக்குள் எடுத்தால் தானே அவரிடம் உலகை எதற்காக படைத்தான் என்பதையும் அதை எவ்விதம் அனுபவித்து லயிப்பது என்ற கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்ள முடியும் என்பது.

ஆகவே அனவைரும் இறைவனை தேடும் முயற்சியில் iranguvom